This Website is Under Construction.
Meanwhile,


What is TMOMA ?

TMOMA - Traditional Marachekku Oil Mills Association (பாரம்பரிய மரச்செக்கு எண்ணெய் ஆலைகள் கூட்டமைப்பு)

TMOMA - குறிகோள்கள் : நூறு வயதிலும் நலமுடன் வாழ்ந்த நம் முன்னோர்கள் பின்பற்றிய உணவே மருந்து என்ற பாரம்பரிய இயற்கை வாழ்வியல் உணவு முறைகளை பின்பற்ற மறந்ததன் விளைவுதான், இன்று நமக்கு முப்பது வயதில் நோய்கள்..! நாட்பது வயதில் முதுமை..! ஐம்பது வயதில் தள்ளாட்டம்..! அறுபது வயதே அரிது..! இன்று நமக்கே இந்த நிலை எனில் நாளை நம் சந்ததிகளின் நிலை..? மருந்தாய் இருந்த உணவு இன்று எப்படி நஞ்சானது..?

கவர்ச்சியான விளம்பரத்துடன் Refined, Double Refined, Purified என்ற பெயரில் கடைகளில் வாங்கும் மலிவுவிலை கலப்பட சமையல் எண்ணெய்களே உணவில் சேரும் முதல் நஞ்சு. அதுவே நாம் நோய்வாய்ப்பட 95% காரணமாகும். முன்பெல்லாம் ஊருக்கு ஒரு மரச்செக்கு எண்ணெய் ஆலை இருந்தது. ஊர் மக்களின் நன்மதிப்பை பெரும் நோக்கில் எண்ணெய்கள் தரம் மிகுந்ததாகவும் சுத்தமாகவும் கண்ணெதிரே மரச்செக்கில் ஆட்டித்தரப்பட்டது. பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வணிகநோக்கில் கலப்பட எண்ணெய்களை மலிவுவிலைகளில் விற்பனை செய்ததால் குடிசை தொழிலாய் ஊருக்கு ஒன்று இருந்த மரச்செக்கு ஆலைகள் அழிந்தன. இதன் விளைவாக நோய்கள் அதிகரித்தன, வீதிக்கு இரண்டு மருத்துவமனைகள் முளைத்தன, மக்களின் வாழ்நாளும் குறைந்தது.

இதற்கு தீர்வு மீண்டும் ஊருக்கு ஒரு மரச்செக்கு எண்ணெய் ஆலை அமைப்பதே என்ற நோக்கில் முறையான பயிற்சிபெற்று மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மரச்செக்கு ஆலைகள் ஒரே குடும்பமாக இணைந்து TMOMA(Traditional Marachekku Oil Mills Association) - என்ற கூட்டமைப்பாக செயல்பட்டு மக்களுக்கு தரமான சுத்தமான எண்ணெய்களை பாரம்பரிய முறையில் மரச்செக்கில் ஆட்டித்தருகிறோம்.



TMOMA - அடிப்படை விதிகள் /செயல்பாடுகள் :
  • மரச்செக்கில் பாரம்பரிய முறைகளை மட்டுமே பின்பற்றி எண்ணெய் தயாரித்தல்.
  • கலப்படமற்ற 100% தூய எண்ணெய்களை தருதல்.
  • இயன்றவரை புதிய எண்ணெய்களாகவே கொடுத்தல்.
  • வாடிக்கையாளர் சந்தேகங்களை வெளிப்படையாக விளக்குதல்.
  • வெளி எண்ணெய்களை வாங்கி விற்பனை செய்யக்கூடாது.
  • சிறுதொழில் என்பதால் மூன்று செக்கிக்குமேல் ஒரு ஆலையில் வைத்திருக்கக்கூடாது.
  • வியாபாரத்திற்கு எண்ணெய்களை மொத்த விற்பனை செய்யக்கூடாது.
  • இயன்றவரை ஆலையிலேயே நேரடி விற்பனை செய்யவேண்டும்.
  • மேலே கூறப்பட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய TMOMA -செயற்குழு உறுப்பினர்கள் திடீர் சோதனையிடுவர்.
  • விதிகளை முறையாக பின்பற்றாத ஆலை உறுப்பினர்கள் TMOMA கூட்டமைப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்.
  • TMOMA உறுப்பினர்களை TMOMA அடையாளஎண் மூலம் அறியலாம்.



For more information
Contact Us